இலங்கையில் பெரும்பாலானோர் பலாக்காய் உணவுகளை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அரிசி உணவுக்கு இணையான அளவு அதில் மாவு சத்து உள்ளதால் பலா மரத்தை அரிசி மரம் என்றும் அழைக்கின்றனர்.
பலாக்காயில் வைட்டமின் ஏ, பி, சி, இரும்புசத்து, பொட்டாசியம், கல்சியம், மாப்பொருள், நார்ச் சத்து மற்றும் புரதம் போன்ற சத்துகள் நிறைந்து காணப்படுகின்றது.
அதோடு மட்டுமல்லாமல் சபோனின், ஐசொபிளாவின் மற்றும் லிக்கினேஸ் போன்ற தாவர ஊட்டசத்துகள் அதில் உள்ளன. இதனால் பலாக்காய் சிறந்த ஆண்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்படுகிறது.
பலாக்காயில் உள்ள ஐக்சுலின் என்ற சத்து, நம்முடைய உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பலாக்காயில் 60 சதவீதம் நீரில் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளது. நீரில் கரைய கூடிய பெக்டின் என்ற ஒரு வகை நார்ச்சத்தும் இரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பை குறைக்கின்றது மற்றும் உயர் ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.
பலாப்பிஞ்சுக்கு நமது உடலிலுள்ள பித்தத்தை நீக்கும் சக்தி இருக்கிறது. இதற்கு ஆண்மையை அதிகரிக்கும் தன்மையும் உள்ளது.
பலாக்காய் உணவுகளுக்கு தாய்ப்பாலை அதிகரிக்கும் சக்தி உள்ளது. பலாக்காயிலுள்ள மாப்பொருளும், நார் பொருட்களும் உடலில் சர்க்கரையின் அளவை இரத்தத்தில் அதிகப்படுத்தாமல் கட்டுப்படுத்துகின்றது.
பலாக்காய் உணவுகளை உட்கொண்ட முப்பது நிமிடங்களில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
போர்த்துகீசர்கள் ஆதிக்கத்திற்கு முன்பு வரை அரிசி உணவுகளுக்கு இணையான பலாக்காய் உணவுகள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் போர்த்துக்கேயரின் வருகைக்கு பின்னர் மரவள்ளிக்கிழங்கு அறிமுகப்படுத்தப்பட்டதால் பலாக்காயின் பயன்பாடு பெருமளவில் குறைந்துவிட்டது.
Post a Comment