செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தந்த இத்தன்னார்வலர்களின் குழுவானது சிங்களம் அல்லது தமிழ், இலங்கையின் கலாச்சாரம் மற்றும் கற்பித்தல் முறைகள் ஆகிய விடயங்கள் தொடர்பாக இடம்பெற்ற 12 வாரகால தீவிர பயிற்சியினை நிறைவு செய்துள்ளது.
இவர்கள் இலங்கை ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுடன் இணைந்து கிராமியப் பாடசாலைகளில் ஆங்கிலக் கல்வியினை மேம்படுத்துவதற்காக எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில் ஆங்கில மொழி ஆசிரியர்களாகப் பணியாற்றுவர்.
இந்நிகழ்ச்சித் திட்டத்தின் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்த கல்வியமைச்சின் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் திணைக்களத்தின் பணிப்பாளரான நிமாலி பதுரலிய, அமைதிப்படையுடனான எமது ஒத்துழைப்பானது அனைத்து இலங்கையர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஆங்கிலமொழிக் கல்வியை மேம்படுத்துகிறது என்றார்.
ஆழமடையும் அமெரிக்க இலங்கை பங்காண்மை மற்றும் கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்றம் தொடர்பான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்நிகழ்வு அடிக்கோடிட்டுக்காட்டுகிறது.
Post a Comment