Ads (728x90)

1782 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவின் தேசிய சின்னமாக உள்ள கழுகு, முக்கிய ஆவணங்களில் குத்தப்படும் முத்திரையாகவும் உள்ளது.

எனினும் அமெரிக்காவின் அதிகாரபூர்வ தேசிய பறவையாக கழுகு இதுவரை அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறான பின்னணியில் கழுகை தேசிய பறவையாக அங்கீகரிக்கும் மசோதா ஒன்று கடந்த வாரம் காங்கிரஸால் முன்வைக்கப்பட்டு பைடனின் கையெழுத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்காவின் அதிகாரபூர்வ தேசிய பறவையாக கழுகை தேர்தெடுப்பதற்கான மசோதாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் கழுகு அமெரிக்காவின் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

250 வருடங்களாக தேசிய பறவையாக கருதப்பட்ட கழுகு, தற்போது உத்தியோகபூர்வமாகியுள்ளது என தேசிய பறவை முன்முயற்சியின் இணைத் தலைவர் ஜெக் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

வட அமெரிக்காவில் முதன் முதலில் இந்த வழுக்கை கழுகு (Bald Eagle) கண்டுபிடிக்கப்பட்டது. தலைப்பகுதியில் வெள்ளை நிறம் கொண்டுள்ள இந்த கழுகு அமெரிக்காவில் சக்தி மற்றும் வலிமையின் அடையாளமாக கருதப்படுகிறது.


Post a Comment

Recent News

Recent Posts Widget