Ads (728x90)

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி டிசம்பர் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கல்வி பொதுத்தராதரப்பத்திர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் 05 ஆம் திகதி முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரை நிகழ்நிலை முறைமை ஊடாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் முன்னதாக அறிவித்திருந்தது.

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget