Ads (728x90)

அரசமைப்புக் கவுன்ஸிலுக்கு எதிர்க்கட்சித் தரப்பின் பிரதிநிதியைத் தெரிவு செய்வதற்காக பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவாகியுள்ளார்.

வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோரின் பெயரும், மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுயவிருப்பின் பேரில் அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார். 

இதனையடுத்து எஞ்சியிருந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.  அதன் பின்னர் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 11 வாக்குகளைப் பெற்று சிவஞானம் சிறீதரன் குறித்த குழுவிற்கு  தெரிவு செய்யப்பட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜீவன் தொண்டமான் 10 வாக்குகளை பெற்றார்.

இதனிடையே அரசமைப்புக் கவுன்ஸிலுக்கு எதிர்க்கட்சித் தரப்பின் பிரதிநிதியாக சிறீதரனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரேரித்திருந்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget