மேல் மாகாண கல்வி செயலாளர் நிசாந்தி ஜெயசிங்க நேற்று இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதன்படி மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலை நேரங்களில் மாணவர்களிடம் மேலதிக வகுப்புக்கான கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு தனியார் வகுப்புகளில் கற்பிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாடசாலை நேரங்களுக்கு பின்னர் அல்லது வார இறுதி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் வெவ்வேறு பகுதிகளில் வைத்து பணத்தை அறவிட்டு தங்களது பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படுவதாக இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண கல்விச் செயலாளர் கே.ஏ.டி.ஆர்.நிஷாந்தி ஜயசிங்க கையொப்பமிட்ட இந்த சுற்றறிக்கை கல்விப் பணிப்பாளர், பிராந்திய பணிப்பாளர்கள், பிரதேச கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றாத ஆசிரியர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், இது குறித்து சகல வலய கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment