Ads (728x90)

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும் தீர்மானம் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால விளக்கியிருந்தார்.

இதன்படி இன்று முதல் பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக போதியளவு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு 6 மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படும் எனவும், அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget