வறியவர்கள் மற்றும் மிகவும் வறியவர்கள் சமூகப் பிரிவினருக்கு தற்போது வழங்கப்படுகின்ற மாதாந்த நலன்புரிக் கொடுப்பனவுத் தொகை 8,500 ரூபாவை 10,000 ரூபா வரை அதிரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மிகவும் வறியவர்கள் என்ற பிரிவின் கீழ் வழங்கப்பட்ட 15,000 ரூபா 17,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நலன்புரிப் பலன்களைப் பெறும் மாற்றுத்திறனாளிகள், பாதிக்கப்படக்கூடிய மற்றும் மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கான சமூகப் பிரிவுகளில், 480,000 குடும்பங்களுக்கு மாதாந்த நல உதவித்தொகை 5,000 மற்றும் 17,000 ரூபா வழங்கப்படும். 960,000 வறிய குடும்பங்களுக்கு 10,000 ரூபா நலன்பரி கொடுப்பனவு வழங்கப்படும்.
இதற்கமைய 2024 மே மாதம் 17ஆம் திகதி வௌியிடப்பட்ட அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு முறைமை இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment