Ads (728x90)

பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்துள்ளதால் ஆட்சி கவிழ்ந்துள்ளது.

கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும். 

தீவிர வலதுசாரிகளும், தீவிர இடதுசாரிகளும் இணைந்து பிரான்சின் பிரதமர் மைக்கல் பார்னியரின் அரசாங்கத்திற்கு எதிராகவும், அமைச்சரவைக்கு எதிராகவும் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதால் பிரான்ஸ் அரசாங்கம் பதவியிழந்துள்ளது.

பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 577 உறுப்பினர்களில் 331 பேர் பிரதமர் மைக்கேல் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். 

இது ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது. பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரனும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

மூன்று மாதங்கள் மாத்திரமே பிரதமராக பதவி வகித்த பார்னியர் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget