Ads (728x90)

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சனத்தொகை கணக்கெடுப்புக்கு வரும் அதிகாரிகளுக்கு சில வீடுகள் தகவல் வழங்காமல் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி அனோஜா செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

தொகை மதிப்பு கணக்கெடுப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget