Ads (728x90)

பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். 

இரவில் நித்திரை செய்யாதவர்கள் உடலில் புத்தி மயக்கம், தெளிவின்மை, உடலில் சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல் போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

இரவில் உறங்குவதைப் பற்றியும், அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர்கள் கூறியுள்ளனர். மேலும் எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதையும் சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் கூடும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.

வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது. இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்த சக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தி இழக்கப்படும். இதனால் மூளை பாதிக்கப்படுவதுடன் இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஒட்சிஜன் உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுத்து தூங்கவும் கூடாது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget