Ads (728x90)

முன்னைய கோட்டாபய அரசாங்கத்தால் 2020 ஆம் ஆண்டு இரத்துச் செய்யப்பட்ட ஓய்வூதிய அதிகரிப்புச் செயல்முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது என தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனவரி 01.2016 ஆம் திகதி முதல் டிசம்பர் 31.2019 வரையிலான காலப்பகுதியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு இந்த ஓய்வூதிய அதிகரிப்பு கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

வரவிருக்கும் வரவு செலவு திட்டத்தில் இந்த சரிசெய்தலுக்கான ஏற்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget