Ads (728x90)

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்றது. இப்பரீட்சைக்கு 323,879 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

2024 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு 319,284 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில் அதில் 51,244 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

அதிகபட்ச வெட்டுப்புள்ளி 143 ஆகவும், குறைந்தபட்ச வெட்டுப்புள்ளி 130 ஆகவும் உள்ளது. 

Post a Comment

Recent News

Recent Posts Widget