Ads (728x90)

காவல்துறை போக்குவரத்து உத்தியோகத்தர்களுக்கு அதிக வேகத்துடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண வேகமானிகள் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கான நிகழ்வு பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த விஜேசூரியவின் தலைமையில் நேற்று முற்பகல் காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன் முதற்கட்டமாக நீர்கொழும்பு, களனி, கம்பஹா ஆகிய காவல்துறை பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கும், மேல் மாகாண தெற்கு போக்குவரத்து பிரிவு பணிப்பாளருக்கும் அமெரிக்க தயாரிப்பிலான குறித்த வேகமானிகள் வழங்கப்பட்டுள்ளன.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget