Ads (728x90)

தொழிலாளர்களுக்கு விரைவாக பதில் அளிப்பதற்காக தொழில் அமைச்சினால் புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

070 7227877 என்ற இந்த புதிய வட்ஸ்அப் இலக்கம், சேவைகளை மேலும் திறம்படச் செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களம் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் மற்றும் தலையீடுகள் விரைவாக செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் மற்றும் அரச ஊழியர்களின் சேவை பிரச்சினைகளுக்கு உடனடி பதிலளிப்பதே இந்த புதிய வட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியதன் நோக்கமாகும் என்று தொழிலாளர் அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget