Ads (728x90)

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சுண்ணக்கல் அகழ்வின் விளைவுகளுக்கு அரச அதிகாரிகள் நிச்சயம் பொறுப்புக்கூற வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ். தென்மராட்சியில் சட்ட விரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவதாக கூறப்படும் இடங்களை அமைச்சர் சந்திரசேகர் நேற்று பார்வையிட்டுள்ளார். இதன்போது பிரதேச மக்களிடம் கலந்துரையாடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் சட்ட விரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தென்மராட்சிப் பிரதேசத்தின் சரசாலை வடக்கு மற்றும் மந்துவில் பகுதிகளில் சுண்ணக்கல் அகழப்பட்டு வரும் இடங்களை அமைச்சர் நேரில் சென்று ஆராய்ந்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget