வடக்கு மாகாணசபையின் பல்வேறு நிதி மூலங்கள் ஊடாக 10 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்புச் செய்யப்பட்ட பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு நேற்று ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.
அதில் தாயும், சிசுவும் ஒன்றாக இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை மீது சகட்டுமேனிக்கு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், சுகாதாரத்துறை அடிமட்டத்திலிருந்து எவ்வாறு இங்கு கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்பதை அனைவரும் மறந்துவிட்டனர் என்றும் அவர் வேதனையுடன் சுட்டிக்காட்டினார்.
மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன், தனது உரையில், 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தப் பதவிக்கு வந்ததாகவும் அப்போது யாழ் மாவட்டத்தில் ஓய்வுபெற்ற மூவரே மருத்துவ அதிகாரிகளாகப் பணியாற்றியதாகவும் இன்று 350 பேர் பணியாற்றுக்கின்ற நிலைமைக்கு வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் ஆளணி மீளாய்வு அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஆளுநரிடம் அவர் கோரிக்கை முன்வைத்தார்.
அலுவலகங்களில் 'சும்மா இருப்பவர்கள்' தான் இன்று அதிகமாகிக்கொண்டு செல்கின்றனர். என்னைச் சந்திக்கும் பொதுமக்களும் அதனைத்தான் சொல்கின்றனர். ஓர் அலுவலகத்துக்குச் சென்றால் இருவர் வேலை செய்வார்கள். ஏனையோர் பேசாமல் இருப்பார்கள் என்று முறையிடுகின்றார்கள். இதுபோதாது என்று எதிர்மறையாகச் சிந்திக்கும் அலுவலர்களும் அதிகமாகின்றது.
'முடியாது' என்ற வார்த்தைதான் அவர்களிடமிருந்து வருகின்றது. தாம் எதையும் எம்மால் செய்ய முடியும் என நினைக்கவேண்டும். அல்லது அதை எப்படிச் செய்யலாம் என்பதைச் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் நாம் முன்னேற முடியும்.
என்னை அரசியலுக்கு அழைத்து வருவதற்கு சிலர் கடந்த காலங்களில் முயற்சித்தார்கள். நான் அதை அடியோடு மறுத்துவிட்டேன். நான் ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதுமில்லை. எனக்கு அந்த எண்ணமும் இல்லை.
ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நாம் மாற்றுத் திட்டங்களை தயாரிக்கவேண்டும். இந்த மருத்துவமனையின் ஏனைய தேவைகளில் எங்களால் செய்து தரக் கூடியவற்றை விரைந்து செய்து தருவோம் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

Post a Comment