Ads (728x90)

ஆசிரியர் கல்லூரிகளின் இறுதி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது குறித்து பரீட்சைத் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி பட்டதாரி அல்லாத பயிற்சி ஆசிரியர்களுக்கான பயிற்சி பாடநெறிகளுக்கான பரீட்சையை எதிர்வரும் மே மாதத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  கூறப்பட்டுள்ளது.

மேற்படி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் 09 ஆம் திகதி முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இணையவழியில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic க்கு பிரவேசித்து வழங்கப்பட்ட பயனர் பெயர்  மற்றும் கடவுச்சொற்களைப் பயன்படுத்தி விண்ணப்பங்களை இணையவழியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget