Ads (728x90)

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வரவு செலவு திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

இன்று முன்தினம் சனிக்கழமை பொகவந்தலாவ பகுதியில் கட்சியின் காரியாலய திறப்பு விழாவில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பராளுமன்ற உறுப்பினர் மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வுகள் கட்டம் கட்டமாக தீர்க்கப்படும்.

மலையக பெருந்தோட்ட பகுதியினை எடுத்து நோக்கினால் கல்வி, சுகாதாரம் மற்றும் வீதிகள் போன்ற பிரச்சினைகளுக்கு கடந்த அரசாங்கத்தின் ஊடாக தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

மலையக பெருந்தோட்ட மக்கள் 201 வருட காலமாக தொழிங்சங்கங்களுக்கு உள்வாங்கப்பட்டவர்கள். இதுவரை காலமும் எமது பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை.

எமது அரசாங்கம் பாராளுமன்றத்தின் ழூன்றில் இரண்டு பெருபான்மையை பெற்றுள்ளது. இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களுக்கும் வளமான எதிர்காலத்தை பெற்றுக் கொடுக்க நாம் நடவடிக்கை எடுப்போம்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இவ்வளவு காலம் மலையக பெருந்தோட்ட மக்களை ஏமாற்றி வந்தனர். நாங்கள் இந்த மக்களுக்கு மாற்றத்தை கொண்டு வர 1965ஆம் ஆண்டில் இருந்து பெரும்பாடுபட்டோம்.

முன்னாள் அமைச்சர்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். முன்னைய காலப்பகுதியை போல் தற்போது அட்டகாசம் பண்ணுவதை நிறுத்தி கொள்ளுங்கள்.

இந்திய அரசாங்கம் வழங்கிய வீடமைப்பு திட்டத்தில் கூட முன்னாள் மலையக தலைவர்கள் ஊழல் செய்துள்ளார்கள். அனைத்து ஊழல்களும் வெகுவிரையில் வெளிவரும் என குறிப்பிட்டார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget