Ads (728x90)

அரசாங்கத்தின் பொறிமுறைகளை அரிசி ஆலை உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அரிசி ஆலைகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாட்டு விலைகளை விட அதிகமாக அரிசியை விற்பதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படாது. அரிசி ஆலை உரிமையாளர்கள் அரசாங்கத்தின் பொறிமுறைகளை ஏற்காவிட்டால் அரிசி ஆலைகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.

அரிசி தட்டுப்பாட்டிற்கு தீர்வை காண்பதற்காக அரசாங்கம் பொறிமுறை ஒன்றை அறிவிக்கும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி இதற்கு சிறிது காலம் எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

அந்த பொறிமுறையை அரிசி ஆலை உரிமையாளர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அரிசி ஆலைகளை கட்டுப்படுத்த இராணுவத்தை பயன்படுத்துவோம். ஆலைகள் வழங்குகின்ற அரிசியின் அளவு போன்ற விபரங்களை பதிவு செய்யும் இராணுவத்தினர், வர்த்தக நிலையங்களிற்கு அரிசி ஆலைகள் என்ன விலைக்கு அரிசியை வழங்குகின்றன என்பதை கண்காணிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அரிசிஆலைகள் அதன் முகாமையாளர்களின் கட்டுப்பாட்டின் கீழேயே செயற்படும் அதன் ஊழியர்களே அதனை இயக்குவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget