Ads (728x90)

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரிவெனாக்களிலுள்ள பௌத்த துறவு மாணவர்களுக்கு ஒரு ஜோடி காலணிகள் வாங்குவதற்கான 3,000 ரூபா வவுச்சர் ஒன்றினை வழங்குவதற்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

250 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட 6,000 பாடசாலைகளில் கல்வி கற்கும் 650,000 மாணவர்களுக்கும், 250 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட தெரிவு செய்யப்பட்டபாடசாலைகளின் 140,000 மாணவர்களுக்கும் இந்த வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளது. 

இத்துடன் விசேட தேவையுள்ள மாணவர்கள் கல்வி பயில்கின்ற 28 பாடசாலைகளிலுள்ள 2,300 மாணவர்களுக்கும், பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற 30,000 பௌத்த துறவு மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

மேலும் மாணவர் ஊட்டச்சத்துத் திட்டத்தை 2025 ஆம் ஆண்டிலும் தொடர்வதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget