Ads (728x90)

மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்திய அரசாங்கத்தில் இருந்த சிலருக்கு மக்கள் மயமான அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்வது கடினமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

Clean Sri Lanka வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெறும் இரண்டு நாள் விவாதத்தின் முதல் நாள் அமர்வில் கருத்து தெரிவித்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

பாராளுமன்றம் கூடிய நாளிலிருந்து இந்த எதிர்க்கட்சியின் பொறுப்புக்கள் என்ன என்றும், இந்த எதிர்க்கட்சி எந்த நோக்கத்திற்காக பேசுகின்றது என்றும் நான் சிந்தித்தேன். அவர்களின் திட்டம் என்ன என்பதை புரிந்துகொள்ள முயற்சித்தேன். எதிர்க்கட்சி என்ற விடயத்தில் அவர்களுக்கு எந்தவொரு பாரதூரமும் தெரியவில்லை. எந்தவொரு காரணமும் இன்றி கூச்சலிடுகின்றார்கள். பாராளுமன்றத்திற்கு இருக்கும் கௌரவம் மற்றும் பாராளுமன்றத்தில் இடம்பெறும் விவாதம் எதற்காக என்பது குறித்தும் புரிந்துகொள்ள முடியாத ஒரு எதிர்க்கட்சியாக மாறியுள்ளது.

இந்த நாட்டிற்கு தேவையான பரிணாமத்திற்கு இந்த நாட்டு மக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதே Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் ஊடான எமது பிரதான நோக்கமாகும். பரிணாம மாற்றத்தை மேற்கொள்வதை அரசாங்கத்திற்கோ, அரச அதிகாரிக்கோ தனியாக மேற்கொள்ள முடியாது. 

அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். மக்களின் இணக்கப்பாடு அவசியமாகும். மேற்கொள்ளப்பட வேண்டிய பரிணாமம் எவை? அந்த பரிணாமம் எவ்வாறு அமைய வேண்டுமென்ற தீர்மானத்தை எடுப்பதற்கு மக்களுக்குள் கருத்தாடல் அவசியமாகும். எமது அரசாங்கம் மக்கள் மயமான அரசாங்கமாகும்.

மக்கள் மயமான அரசாங்கம் செயற்படுவதில் ஒரு கலாசாரம் உள்ளது. அதில் மக்களும் பங்குகொள்வார்கள். மக்கள் எதிர்ப்பு அரசாங்கத்தினுள் இருந்தவர்களுக்கும், மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்திய அரசாங்கத்தில் இருந்தவர்களுக்கும் அதனை புரிந்துகொள்ள முடியாமை குறித்து நான் ஆச்சரியப்படப் போவதில்லை.  

சட்டங்களை அமுல்படுத்தி கட்டாயத்தின் அடிப்படையில் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் அல்ல Clean Sri Lanka  வேலைத்திட்டம் என குறிப்பிட்டார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget