எஞ்சிய 6 சம்பவங்கள் காணி தகராறு போன்றவற்றால் இடம்பெற்றவை என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய 49 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது பயன்படுத்தப்பட்ட ரி 56 ரக துப்பாக்கி, இரு பிஸ்டல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை தவிர சமூகத்தில் சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டு வந்த ரி 56 ரக துப்பாக்கிகள் நான்கும், பிஸ்டல்கள் நான்கும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்ட 5 மோட்டார் சைக்கிள்களும், இரண்டு கார்கள், 2 வேன்கள், 2 முச்சக்கரவண்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment