16 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் போட்டியில் லீக் மற்றும் நாக்அவுட் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க மகளிர் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை பெற்றது. கொங்காடி ட்ரிசா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இலகுவான இலக்கான 83 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இந்திய மகளிர் அணி 11.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றியை பெற்றது.
கொங்காடி ட்ரிசா ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களை பெற்றார். இந்தத் தொடரில் இந்திய மகளிர் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையான தமிழ் நாட்டின் கமலினி குணாலன் ஒரு அரைச்சதம் உட்பட 143 ஓட்டங்களை பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ. ரூபா 5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
Post a Comment