நாம் நமது சொந்த பொருளாதார நிகழ்ச்சி நிரலை அமைத்து பொருளாதார இறையாண்மைக்கு நெருக்கமாக செல்ல வேண்டும். அத்துடன் எதிர்காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தொடர வலுவான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.
மக்களின் சம்பளம் குறைந்துள்ளதால் நியாயமான சம்பள உயர்வு வழங்க வேண்டும். குடிமக்களைப் பராமரிப்பது மனிதாபிமான அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிரான பல்வேறுபட்ட கருத்துகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தை அரசாங்கத்தால் ஸ்திரப்படுத்த முடிந்ததுடன், ஐக்கிய அமெரிக்க டொலருக்கெதிரான ரூபாவை பலப்படுத்தியதுடன், முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் பொருளாதார வளர்ச்சியை 2025ஆம் ஆண்டு 5 சதவீதத்தில் பேணுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பொருளாதாரத்தின் சக்திவாய்ந்த பகுதி ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்களின் கைகளில் குவிந்துள்ளதுடன் பொருளாதாரத்தில் அதிக ஜனநாயக மயமாக்கல் தேவை என்றார்.
அரச சேவையில் முதல் அடிப்படை சம்பள திருத்தம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் ஆகிவிட்டதால், அனைத்து காரணிகளையும் ஒட்டுமொத்தமாக மதிப்பிட்டு சம்பள கட்டமைப்பை திருத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.
அதன்படி குறைந்தபட்ச மாதாந்த அடிப்படை சம்பளத்தை ரூபா 15,750 அதிகரித்து ரூபா 24,250 இலிருந்து ரூபா 40,000 ஆக உயர்த்த நாங்கள் முன்மொழிகிறோம்.
தற்போதுள்ள தற்காலிக இடைக்கால கொடுப்பனவு மற்றும் சிறப்பு கொடுப்பனவை அடிப்படை சம்பளத்துடன் இணைத்து, அடிப்படை சம்பளத்தில் ரூபா 8,250 அதிகரிப்பை ஏற்படுத்த முன்மொழிகிறேன்.
இது நீதித்துறை சேவைகள், பொது நிறுவனங்கள், சட்டப்பூர்வ வாரியங்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் முப்படை அதிகாரிகளுக்கும் பொருந்தும்.
குறைந்தபட்ச வருடாந்த சம்பள உயர்வு 250 ரூபாவை 450 ரூபாவாகவும், ரூபா 500 சம்பள உயர்வு ரூபா 900 ஆகவும் உயர்த்தப்படும்.
இந்த சம்பள உயர்விற்காக மதிப்பிடப்பட்ட மொத்த செலவு ரூபா 325 பில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிதிக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, இந்த சம்பள உயர்வு கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படும்.
தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க தனியார் முதலாளிகள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ஜனதிபதி குறிப்பிட்டார்.
இதன்பட, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி ரூபா 21,000 இலிருந்து ரூபா 27,000 ஆகவும், ஜனவரி 2026 க்குள் ரூபா 30,000 ஆகவும் உயர்த்த தனியார் முதலாளிகள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
முன்பள்ளி சிறார்களுக்கான காலை உணவு நிகழ்ச்சித்திட்டத்தில் மாணவர் ஒருவருக்கு பெற்றுக் கொடுக்கப்படும் உணவுக்கான கட்டணத்தை ரூபா 60 இலிருந்து ரூபா 100 ஆக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படுகின்ற புலமைப்பரிசிலினை ரூபா 750 இலிருந்து ரூபா 1,500 ஆக அதிகரிக்கப்படும்.
இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய 2025 ஆம் ஆண்டில் அரச வருமானம் 4,990 பில்லியன் ரூபாவாக காணப்படுகின்றது.
2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைய அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 7,190 பில்லியன் ரூபாயாகக் கணிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிணங்க 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் துண்டுவிழும் தொகை 2,200 பில்லியன் ரூபாயாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment