அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் சமர்ப்பிக்கும் முதல் வரவு -செலவுத் திட்டம் இதுவாகும்.
2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக ஜனவரி 09 ஆம் திகதியன்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டது.
வரவு செலவுத் திட்டத்தில் 2025.01.01 ஆம் திகதி முதல் 2025.12.31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு அரச செலவினமாக 4,218 பில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு அரச செலவினமாக 6,978 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு அரச செலவினம் 2,760 பில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6:00 மணிக்கு நடைபெறும்.
ஒதுக்கீட்டு மசோதா மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதி வரை நான்கு சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்களுக்கு நடைபெறும்.
மசோதாவின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறும்.
Post a Comment