Ads (728x90)

ஜப்பான் அரசாங்கம் ”கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்திற்கு 300 மில்லியன் ஜப்பானிய யென் (565 மில்லியன் இலங்கை ரூபா) நிதியுதவியை வழங்குகிறது. 

இந்த மானிய உதவிக்கான கைச்சாத்திடும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ மற்றும் ஜப்பானின் வெளியுறவுக்கான நாடாளுமன்ற துணை அமைச்சர் திருமதி அகிகோ இகுயினா ஆகியோரின் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

இந்த மானிய உதவி திட்டத்தில் இலங்கைக்கான ஜப்பானிய தூதர் அகியோ இசோமாட்டா மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் கே. எம். எம். சிறிவர்தன ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த மானிய உதவியின் கீழ் ஜப்பானிய நிறுவனங்களால் தயாரிக்கப்படும் 28 உயர்தர குப்பை அகற்றும் இயந்திரங்கள், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய திடக்கழிவு மேலாண்மை ஆதரவு மையம் மூலம் மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வழங்கப்படவுள்ளது. இவற்றில் மேற்கு மாகாணத்திற்கு 14 வாகனங்களும், கிழக்கு மாகாணத்திற்கு 8 வாகனங்களும், வடக்கு மாகாணத்திங்கு 6 வாகனங்களும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

இந்த இடங்களில் கழிவு சேகரிப்பு மற்றும் போக்குவரத்து திறனை மேம்படுத்துவதையும், சுகாதாரமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான கழிவு மேலாண்மையை உறுதி செய்வதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கழிவுகள் குவிவதையும், பொது சுகாதாரம் மற்றும் காற்றின் தரத்தில் அதன் தாக்கத்தையும் சமாளிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த ஜப்பான், மேல் மாகாண திடக்கழிவு மேலாண்மை பெருந்திட்ட உருவாக்கம் உட்பட கழிவுகளை அகற்றும் உள்ட்கட்டமைப்பை மேம்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

இது “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்திற்கான ஜப்பானின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget