Ads (728x90)

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் பிரதான சந்தேகநபரை ஆரம்பத்தில் விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இத்துடன் லலித் ஜயசிங்கவுக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அதை அவர் செலுத்தத் தவறினால் அவருக்கு மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்-புங்குடுத்தீவை சேர்ந்த பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா, 2015 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கொலைக்குற்றவாளிகள் ஏழு பேருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் ஏற்கனவே மரண தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget