இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.
அர்ஜூன் கதாபாத்திரத்தில் வரும் அஜித் மற்றும் கயல் கதாபாத்திரத்தில் வரும் திரிஷா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஒரு கட்டத்தில் திரிஷா விவாகரத்து செய்யும் முடிவை எடுக்கிறார். அதற்கு அஜித் ஒப்புக்கொள்ளாமல் பிரச்னையைச் சரி செய்ய முயல்கிறார். அப்படியான சூழலில் திரிஷா காணாமல் போகிறார்.
அது கடத்தல் என்பது தெரிய வருகிறது. யார் கடத்திச் சென்றது எனக் குழம்பும் அஜித், எப்படி திரிஷாவை கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் கதை. திருப்பங்களும் ஆக்சன்களும் இணைந்த படமாக விடாமுயற்சியைக் கொடுக்க முயன்றுள்ளார் மகிழ்த்திருமேனி.
Post a Comment