வட்டுக்கோட்டை சுழிபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
கல்விக்கு சிறந்த பெயர் பெற்ற இடமான யாழ்ப்பாணத்தில் இன்று துர்நடத்தைகள் அதிகரித்து வருவதற்கு காரணம் என்ன? கலை கலாச்சாரம் கட்டிக்காத்த யாழ்ப்பாணத்தில் ஏன் இத்தகைய நிலை. போதைப்பொருள் கடத்தல்மற்றும் பயன்பாடுகள் அதிகரித்துள்ளமையை நிறுத்தவேண்டும்.
வாள் வெட்டு அச்சறுத்தல்கள் இடம்பெற்று வருகிறது. இங்குள்ள ஒரு சில பொலிஸ்காரர்களின் அட்டுழியங்கள் அதிகரித்துள்ளது. போதைவஸ்துக்காரர்களுடன் பொலிசார் தொடர்பில் இருக்கின்றார்கள். இவைகளுக்கு கூடிய சீக்கிரம் முடிவுகளை எடுத்து எங்களுடைய சமூகத்தை மீட்டு எடுக்க வேண்டும்.
யாழ்ப்பாணம் ஏன் இந்தப் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளது என்பதை நாம் தேடிப் பார்க்கவேண்டும். இங்குள்ள குடும்பங்கள் சமூக ரீதியாக, இன ரீதியாக, மத ரீதியாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
இவை எல்லாவற்றக்கும் அரசியல் வாதிகளும் காரணமாகின்றார்கள். எந்தவொரு அரசியல்வாதியும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு, பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
இதற்காககத்தான் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டை சுத்தப்படுத்துவது மட்டுமன்றி அனைவரது மனங்களையும் சுத்தப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Post a Comment