இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
குற்ற கும்பல்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்களினாலேயே சமீபத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளன. அவற்றை தடுப்பதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
பாதாள உலக குழுவை முற்றாக அழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் அதை செய்து முடிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் அரசியல் பாதுகாப்பை கொண்டு இந்த குழு வளர்ந்துள்ளது. தற்போது அவ்வாறான பாதுகாப்பு அவர்களுக்கு கிடைப்பதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அதேபோல் உள்ளூராட்சி தேர்தலை மிக விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எந்தவித சட்ட ரீதியான தடைகளும் இல்லையெனவும், அதற்கு தேவையான நிதியையும் அரசாங்கம் ஒதுக்கியிருக்கும் நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
Post a Comment