குறிப்பாக விநாயகர் சிலையை எல்லா திசையிலும் வைத்து வழிபடக்கூடாது. வடகிழக்கு மூலையில் விநாயகர் சிலையை வைப்பது சிறப்பானதாகும். வடகிழக்கு மூலையில் வைக்க வாய்ப்பு இல்லாதவர்கள், விநாயகர் சிலையை வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கியவாறு இருக்கும் படி வைத்து வழிபட வேண்டும்.
மேலும் விநாயகரின் தும்பிக்கை இடது பக்கமாக திரும்பி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
விநாயகர் சிலையின் பின்புறம் வீட்டில் உள்ள எந்த அறையையும் பார்த்தபடி இருக்கக் கூடாது. ஏனெனில் சிலையின் பின்புறம் வறுமையை குறிக்கும்.
அதனால் விநாயகர் சிலையின் பின்புறம் வீட்டிற்கு வெளிப்பக்கம் பார்த்தவாறு இருக்க வேண்டும். விநாயகர் சிலை வெள்ளி போன்ற உலோகத்தால் ஆனது என்றால் அதனை வட கிழக்கு அல்லது தென் மேற்கு திசையில் வைக்கலாம்.
அறையின் தென் திசையில் விநாயகர் சிலையை வைக்கக் கூடாது. கழிவறையுடன் இணைக்கப்பட்டுள்ள சுவற்றை நோக்கியும் விநாயகர் சிலையை வைக்க கூடாது.
Post a Comment