Ads (728x90)

எதிர்வரும் 5 வருடங்களுக்குள் இந்த நாட்டில் வாழும் 40 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பிரஜைக்கும் ஒரு வருடத்திற்கு அல்லது இரண்டு வருடத்திற்கு என குறிப்பிட்ட காலப்பகுதியைத் தெரிவு செய்து அக்காலப்பகுதியில் மருத்துவ பரிசோதனைக்கு வாய்ப்பு அளிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என சுகாதார மற்றும் ஊடகப் பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். .

இதனால் அடையாளம் காணப்படும் நோய் நிலைமைக்கு அவசியமான சிகிச்சை சேவைகளை வழங்குவதும், அதனுடன் தொடர்புடைய நீண்ட காலத் திட்டம் ஒன்றை தற்போதைய அரசாங்கத்தின் தேசிய கொள்கையில் இணைத்துள்ளதுடன் தற்போது சுகாதார அமைச்சின் ஊடாக அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நீண்ட காலத் திட்டத்தில் குறுங்கால செயல்பாடாக “சுப உதான” நடமாடும் சுகாதார கிளினிக் திட்டத்தை அறிமுகப்படுத்தக் கூடியதாக இருப்பதாகவும் சுகாதார மற்றும் ஊடகப் பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

கிராமிய மக்களுக்கு ”சுவசெத” வழங்கும் ”சுவ உதான” ஐந்தாவது நடமாடும் சுகாதார கிளினிக் திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போது சுகாதார மற்றும் ஊடக பிரதி அமைச்சர் இதனை தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget