Ads (728x90)

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த 05 மாதங்களில் மேற்கொண்ட 03 வெளிநாட்டுப் பயணங்களுக்காக 1.8 மில்லியன் ரூபாய் எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெளிவுப்படுத்தியுள்ளார்.

இதன்படி ஜனாதிபதியின் சீன விஜயத்திற்கான விமான பயணச்சீட்டுகளை சீன அரசாங்கம் வழங்கியதாகவும், இந்தப் பயணத்திற்காக ஜனாதிபதி செயலகம் ரூபா 386,000 மட்டுமே செலவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஜனாதிபதி அநுரவிற்கு விஜயம் செய்ததற்காக வழங்கப்படும் கொடுப்பனவாக 2,055 அமெரிக்க டொலர்கள் கிடைத்ததாகவும், அவை எந்த செலவும் இல்லாமல் ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிபிட்டுள்ளார்.

இதேவேளை இந்திய விஜயத்தின் போது விமான பயணச் சீட்டுக்காக ரூபா 3.12 லட்சம் மற்றும் இராஜதந்திர நினைவுப் பொருட்களுக்காக ஒதுக்கப்ட்ட பணம் உட்பட ரூபா 12.20 லட்சம் செலவிடப்பட்டதாகவும் அமைச்சர் நளிந்த தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி அநுரவின் துபாய் விஜயத்தின் போது விமான பயணச் சீட்டு அந்நாட்டிலிருந்து பெறப்பட்டதாகவும், கொடுப்பனவாக கிடைத்த 960 அமெரிக்க டொலர்களும் ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்துக்காக ஜனாதிபதி செயலகம் விமானச்சீட்டு உட்பட இதர தேவைகளுக்காக 12 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவை செலவு செய்தது. சீனா, துபாய் ஆகிய நாடுகளுக்காக 5 இலட்சத்து 8,8571 ரூபா செலவிப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளுக்குமான விமான பயணச்சீட்டுக்காக செலவுகளை அந்நாடுகளே பொறுப்பேற்றன எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் செலவு குறைப்பே கேள்விக்குள்ளாக்குபவர்கள், மஹிந்த ராஜபக்ஷவின் 3,572 மில்லியன் ரூபாவை கேள்விக்குள்ளாக்கவில்லை என்று ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget