இருவருக்கும் இடையிலான சந்திப்பின்போது 10 டவுனிங் ஸ்ரீட்டிற்கு வெளியே மக்கள் பாராட்டும் விதத்தில் கோசமிட்டதை சுட்டிக்காட்டிய பிரிட்டன் பிரதமர், இது உங்களை எவ்வளவு தூரம் பிரிட்டன் மக்கள் ஆதரிக்கின்றனர் என்பதை வெளிப்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் என்றும் உங்களிற்கு ஆதரவாக இருப்போம் என உக்ரைன் ஜனாதிபதியிடம் பிரிட்டிஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதற்கு இவ்வாறான நண்பன் இருப்பது குறித்து எனது நாடு பெருமகிழ்ச்சியடைகின்றது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த யுத்தத்தின் ஆரம்பத்திலிருந்து பிரிட்டன் மக்கள் வெளிப்படுத்திவரும் ஆதரவிற்கு நன்றியை தெரிவிக்க விரும்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment