Ads (728x90)

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலைக்கு நேற்று வெள்ளிக்கிழமை அமைச்சர் குழாம் நேரில் விஜயம் மேற்கொண்டு தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் விடுத்த அழைப்பின் பேரிலேயே அமைச்சர் உள்ளடங்கலான குழுவினர் விஜயம் செய்துள்ளனர்.

1950 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 700 ஏக்கர்கள் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் சுமார் 1,500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றியதுடன் வருடமொன்றிற்கு சுமார் 760,000 மெற்றிக்தொன் சீமெந்து உற்பத்தி செய்யப்பட்டது. 

நாட்டில் நிலவிய போர்ச் சூழலின் காரணமாக தொழிற்சாலையின் செயற்பாடுகள் 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன.

இந்நிலையில் தற்போது இயங்காநிலையில் இருக்கும் சீமெந்து தொழிற்சாலையை சீமெந்து உற்பத்திக்கென ஆரம்பிப்பதற்கு பல சவால்கள் உள்ளதுடன் அவை தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டன.

சீமெந்து தொழிற்சாலையாக அல்லாமல், வடக்குக்கு பொருளாதார பலன் தரக்கூடிய வேறு திட்டங்களை இங்கு செயல்படுத்தலாமா என்பது பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன் , எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, யாழ். மாவட்ட பதில் செயலாளர் பிரதீபன், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget