Ads (728x90)

குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு தொந்தரவு இல்லாத கல்வி முறை 2026 முதல் தரம் 01 மற்றும் தரம் 06 வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்படும். இது புகழ் அல்லது வாக்குகளுக்கான திட்டம் அல்ல, மாறாக நாட்டில் கல்வியை மேம்படுத்துவதற்கான ஒரு உண்மையான நடவடிக்கை என்று பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஆசிரியர்களை நியமிப்பது முறையாக இல்லை என்றும், எதிர்காலத்தில் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய கல்வி சீர்த்திருத்திற்கமைய புதிய பாடத்திட்டத்திற்கான ஆசிரியர் மட்ட பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

சிறுவர்களின் ஆரம்ப கல்வி முக்கியமாக இருந்தாலும் அதற்குரிய முறைமையொன்று இல்லையென பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கம்பஹா மாவட்டத்தின் மீரிகம, மினுவங்கொட மற்றும் கட்டான ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget