Ads (728x90)

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு இன்று அதிகாலை 03:21 மணிக்கு சுப நேரத்தில் பிறந்தது. தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக நாம் கொண்டாடுகிறோம்.

வாக்கிய பஞ்சாங்கத்திற்கு அமைய இன்று அதிகாலை 2.29 மணிக்கும், திருக்கணித பஞ்சாங்கத்திற்கு அமைய அதிகாலை 3.21 மணிக்கும் புதுவருடம் பிறந்தது.

சூரிய பகவான் மீன ராசியில் இருந்து மேஷ இராசிக்கு பிரவேசிக்கும் நாள் சித்திரை வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தமிழ் வருடங்களை எமது முன்னோர்கள் அறுபதாக வகுத்துள்ளதுடன் பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய வரையில் அந்த அறுபது ஆண்டு பட்டியல் நீள்கிறது.

படைத்தற் கடவுளான பிரம்மா இந்த அண்டத்தை சித்திரை மாதம் முதல் நாளில் படைத்ததாக புராணங்கள் கூறுகின்றது.

சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். இந்த நாளில் தான் பிரம்ம தேவர் உலக உயிர்களை படைக்க துவங்கியதாக சொல்லப்படுகிறது. சூரிய பகவான், மேஷம் துவங்கி மீனம் வரை 12 ராசிகளிலும் தனது பயணத்தை நிறைவு செய்வதை ஒரு ஆண்டு என்கிறோம்.


Post a Comment

Recent News

Recent Posts Widget