ஹோர்கே மாரியோ பெர்கோலியோ என்ற இயற்பெயரை கொண்ட போப் பிரான்சிஸ் 17 டிசம்பர் 1936 ஆம் ஆண்டு பிறந்தார். கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆம் திருத்தந்தை ஆவார். இவர் 2013, மார்ச்சு 13 ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆம் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் வத்திக்கான் நகரின் தலைவரும் ஆவார். இவர் ஆர்ஜென்டீனா நாட்டைச் சார்ந்தவர். புவேனோஸ் ஐரேஸ் உயர்மறை மாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றியவர்.
தென்னமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தையான போப் பிரான்சிஸ் இயேசு சபையிலிருந்து திருத்தந்தைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் கிரகோரிக்கு பின்பு கடந்த 1200 ஆண்டுகளில் ஐரோப்பாவுக்கு வெளியே இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை ஆவார்.
Post a Comment