ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்கள், கடுமையான பாதிப்பை சந்தித்தன. இதனால் ட்ரம்பின் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தன.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் அதிகாரத்தை மீறி செயல்படுவதாகவும் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வரிகளை அமுல்படுத்த அதிகாரம் இல்லை எனவும் அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ட்ரம்பின் குடியரசுக் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள காங்கிரஸுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ட்ரம்ப் நிர்வாகம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment