தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை விட, நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார்.
வீதி விபத்து, வாகன இறக்குமதிக்காக செலவிடும் பாரிய செலவு போன்ற பாதகமான நிலைமைகளைச் சமாளிக்க நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை ஒரு புதிய நிலைக்கு உயர்த்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
விசேட தேவைகள் உள்ள சமூகம் உட்பட அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும், வசதியையும் உறுதி செய்யும் சுத்தமான, அழகான ரயில் நிலைய கட்டமைப்பை நாட்டில் உருவாக்குவதே ‘Dream Destination’ திட்டத்தின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.
வீதிப் பாதுகாப்பு செயல் திட்டத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளித்தார்.
ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவதற்கான திட்டத்தை எம்.ஐ.சி.டி. அசோசியேட்ஸ் நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் மற்றும் முக்கிய கட்டிடக் கலைஞர் முரால் இஸ்மாயில் வழங்கினார்.

Post a Comment