Ads (728x90)

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் 15% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இந்த மின் கட்டண திருத்தம் நாளை முதல் அமுலுக்கு வருவதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

90 அலகுகளுக்கு குறைவான மதத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தில் இந்த முறை எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் 30 அலகுகளுக்கு குறைவான வீட்டு பாவனையாளர்களுக்கு 8% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி ரூ.75 ஆக இருந்த மாதாந்த கட்டணம் ரூபா 80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

30 - 60 அலகு பிரிவின் ஒரு அலகுக்கு இதுவரை இருந்த விலை 2 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன், அதன் ஒரு அலகின் புதிய விலை ரூபா 8 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அந்த பிரிவின் மாதாந்த கட்டணம் 10 ரூபாவால் அதிகரித்து ரூபா 210 ஆக மாறியுள்ளது. 61 - 90 அலகுகளுக்கான கட்டண அதிகரிப்பு ரூபா 240 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. 

91 - 120 அலகுகளுக்கான கட்டண அதிகரிப்பு ரூபா 360 ஆகவும், 121 - 150 அலகுகளுக்கான மொத்த கட்டண அதிகரிப்பு ரூபா 600 ஆகவும், 121 - 180 அலகுகளுக்கான மொத்த கட்டண அதிகரிப்பு ரூபா 840 ஆகவும், 180 அலகுகளுக்கு மேல் உள்ள பிரிவிற்கு ரூபா 2020 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget