இந்த விமானத்தில் 242 பயணிகள் இருந்தனர், மேலும் தரையில் இருந்தவர்களும் இதில் உயிரிழந்துள்ளனர். ஒரு பயணி மட்டுமே உயிர் தப்பியுள்ளார்.
40 வயதான விஷ்வாஷ் குமார் என்ற பிரித்தானிய இந்தியர், 11A இருக்கையில் அமர்ந்திருந்தவர், அவசர வெளியேறும் வழியருகே இருந்ததால் உயிர் தப்பியுள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் புறப்படுவதற்குத் தயாராக இருந்தது.
இந்த விமானம் அகமதாபாத்திலிருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்திற்குப் புறப்பட இருந்தது. விமானத்தில் 230 பயணிகள், 10 கேபின் பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என 242 பேர் மொத்தமாக இருந்தனர். விமானம் மதியம் 1.38 மணியளவில் விமான நிலைய ஓடுதளத்திலிருந்து கிளம்பியது. விமானம் கேப்டன் சுமீத் சபர்வால் தலைமையில் முதல் அதிகாரி கிளைவ் குந்தர் முன்னிலையில் விமானம் சீராக ஓடுதளத்தில் ஓடியது.
வழக்கம் போல் டேக் ஆஃப் ஆன விமானம் புறப்பட்ட 5 ஆவது நிமிடத்தில் தடுமாற ஆரம்பித்தது. சுமார் 825-வது அடியை எட்டிய போது விமானம் அதற்கு மேல் செல்ல முடியாமல் திணறியது. ஆபத்தை உணர்ந்த கேப்டன் சுமீத் சபர்வால் ஆபத்துக் காலத்தில் விடுக்கப்படும் 'மே டே' சமிஞ்ஞையை விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு 3 முறை அறிவித்தார். ஆனால் அதற்குள் விமானம் தனது கட்டுப்பாட்டை இழந்து தரையிறங்க ஆரம்பித்தது.
விமான நிலையத்திலிருந்து சற்றுத் தூரத்தில் உள்ள மேகனி நகர் பகுதியில் விமானம் விழுந்து சம்பவ இடத்திலேயே வெடித்துச் சிதறியது. பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டாலும் ஒரு சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த 240 பேர் உயிரிழந்துள்ளனர். விமானம் விழுந்து விபத்துக்குள்ளான மருத்துவக்கல்லூரி கட்டடத்தில் இருந்த 50 பேர் உயிரிழந்துளனர். இதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது என குஜராத் மாநில ஈடிவி பாரத் செய்தியாளர் உறுதி செய்துள்ளார்
இந்த விமானத்தில் இதில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டவர்கள், 7 பேர் போர்த்துக்கல் நாட்டவர்கள் மற்றும் கனடா நாட்டவர் ஒருவர் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Post a Comment