Ads (728x90)

நுவரெலியா மாநகரசபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வரை தெரிவுசெய்வதற்கான கன்னி அமர்வு மத்திய மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் தலைமையில் இன்று நடைபெற்றது.

மாநகர முதல்வரை தெரிவுசெய்வதற்குத் திறந்த வாக்கெடுப்பு இன்று மாநகரசபையில் நடைபெற்ற போது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் உபாலி வணிகசேகர 14 வாக்குகளைப் பெற்று நகர முதல்வரானார்.

நுவரெலியா மாநகரசபையில் தேசிய மக்கள் சக்தி 12 ஆசனங்களை பெற்ற நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரு உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர்.

இந்நிலையில் நுவரெலியா மாநகரசபையின் பிரதி முதல்வராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் சிவன்ஜோதி யோகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். சுமார் இரு தசாப்தங்களுக்கு பிறகு நுவரெலியா மாநகரில் பிரதி முதல்வர் பதவியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget