Ads (728x90)

ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு மூலோபாய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கனடா பிரதமர் மார்க் கார்னி கையெழுத்திட்டுள்ளார்.

இதன் மூலம் கனடா இனி அமெரிக்காவை இராணுவ உபகரணங்களுக்காக அதிகம் சார்ந்திருப்பதை குறைத்துக்கொள்ளும் ஒரு முக்கிய நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார். 

இந்த ஒப்பந்தம், கனடிய நிறுவனங்களுக்கு 1.25 டிரில்லியன் யூரோ மதிப்புள்ள 'ரீஆர்ம் ஐரோப்பா' (ReArm Europe) திட்டத்தில் பங்கேற்க வழிவகை செய்துள்ளது.

அத்துடன் SAFE திட்டம் என அறியப்படும் ஒரு திட்டத்தின் கீழ், பிற நட்பு நாடுகளுடன் இணைந்து இராணுவ உபகரணங்களை வாங்குவதற்கும் கனடா அரசாங்கத்திற்கு இது உதவும். 

இருப்பினும், இந்த அம்சங்கள் நடைமுறைக்கு வர இன்னும் மேலதிக பேச்சுவார்த்தைகளும், ஒப்பந்தங்களும் தேவைப்படும். கடந்த பல மாதங்களாகவே கனடாவின் இராணுவ உபகரணங்களுக்கான ஒதுக்கீட்டில் சுமார் 70% அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தளவாடங்களுக்காக செலவிடப்படுவதில் தனது அரசாங்கம் அதிருப்தி கொண்டுள்ளதாக பிரதமர் கார்னி தெரிவித்துள்ளார்.



ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசை முழுமையாக சார்ந்திருக்க முடியாது என்பதால் கனடா பாதுகாப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளது.

பாதுகாப்பைக் காரணமாக காட்டி கனடாவை அமெரிக்காவுடன் இணக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டிக்கொண்டிருக்க, இனியும் பாதுகாப்புக்காக முழுமையாக அமெரிக்காவை நம்பிக்கொண்டிருக்கமுடியாது என கனடா முடிவு செய்துள்ளது.

அமெரிக்கர்களுடன் கைகோர்ப்பதைவிட ஐரோப்பியர்களுடன் கைகோர்க்கலாம் என, ஐரோப்பிய ஒன்றியத்துடன் பாதுகாப்பு தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்றில் கனடா பிரதமரான மார்க் கார்னி கையெழுத்திட்டுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget