போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டு குறித்த சேவையை ஆரம்பித்து வைத்தனர்.
அதேவேளை புகையிரத நிலையத்தில் நூலகம் ஒன்றினையும் அங்குரார்ப்பணம் செய்து வைத்ததோடு, புகையிரத நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளையும் நாட்டி வைத்தனர்.
யாழ். காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய எரிபொருள் களஞ்சியசாலையும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி அவர்களால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment