Ads (728x90)

செம்மணி புதைகுழிக்கு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தலைமையில் இன்று முற்பகல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. 

 “இலங்கை அரசே எம்மிடம் இருந்த வலிந்து அபகரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு மனித புதைகுழிகளில் புதைக்கப்பட்ட எமது அன்புக்குரியோரின் பெறுமதிமிக்க உயிருக்கே நீதி கோருகின்றோம்” எனும் தொனிப்பொருளில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நீதி வேண்டும் நீதி வேண்டும் செம்மணி படுகொலைக்கு நீதி வேண்டும், இது மண்ணல்ல புதைகுழி, ஐ.நா செவி கொடு, ஜனாதிபதி கண்விழி, புதைகுழிகள் அடைக்கலம் அல்ல உண்மை பேசும் தளங்கள் ,விசாரணையை துரிதப்படுத்து ,பட்டலந்தவுக்கு ஒரு நீதி செம்மணிக்கு ஒரு நீதியா ஆகிய கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பொதுமக்கள், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர், மதகுரு தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget