Ads (728x90)

புதிய சட்ட திருத்தத்தின் மூலம் தனியார் துறையின் அடிப்படை சம்பளம் கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் 27 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதுடன் ஜனவரி முதலாம் திகதி முதல் அது 30,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலையாட்களின் வரவு -செலவுத் திட்ட நிவாரணப்படி திருத்தச் சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதன  திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தனியார் துறைக்கு அதிகரிக்கப்பட்டிருக்கும் இந்த 27ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் 30 ஆயிரமாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. அதன் பிரகாரம் ஜனவரி மாதம் முதல் தனியார் துறைக்கு 30ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளமாக வழங்கப்பட வேண்டும். அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் நாள் ஒன்றுக்கான சம்பளம் தற்போதைக்கு 1,700 ரூபா என நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.

எனவே இந்த சட்ட திருத்தம் மூலம் தனியார் துறைக்கு இந்த அடிப்படை சம்பள அதிகரிப்புக்கு  சட்ட ரீதியிலான அனுமதியை அரசாங்கம் வழங்கும் என்றார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget