Ads (728x90)

பராமரிப்பு நிலையங்களில் உள்ள சிறார்களுக்கும் மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்கும் ரூபா 5,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.

இதில் ரூபா 2,000 அவர்களின் வங்கி கணக்கிலும், ரூபா 3,000 மாதாந்த தேவைகளுக்காக அவர்களின் பராமரிப்பாளர்களிடமும் வழங்கப்படும். 

இந்த திட்டத்தின் மூலம் 9,191 குழந்தைகள் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜூலை 01 முதல் அமுலாகும் வகையில் சிறார்கள் வீதியோரங்களில் யாசகம் பெறுதல், பண்டங்களை விற்பனை செய்தல் தடை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



 

Post a Comment

Recent News

Recent Posts Widget