முறையான, கவர்ச்சிகரமான நிறுவன அமைப்பை கட்டமைப்பதற்காக நாடு தழுவிய தொழிற்கல்வி நிறுவனங்களை மையமாக கொண்டு, கம்பஹாவில் ஆரம்பிக்கப்பட்ட 'ஸ்ரம மெஹெயும' திட்டத்தின் ஆரம்ப நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே, பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த தீர்மானித்திருக்கும் புதியக் கல்வி சீர்திருத்தங்களுக்குள் தொழிற்கல்விக்கும் சிறப்பான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி சீர்திருத்தம் என்பது சிறிய விடயம் அல்ல. அது பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு அப்பாற்பட்ட பாரிய செயல்திட்டமாகும். எனவே பாடசாலை கல்வியின் மூலமே தொழிற்கல்வியை வழங்க நாம் திட்டமிட்டுள்ளோம்.
இதன் மூலம் அரசு எதிர்பார்க்கும் மறுமலர்ச்சி யுகத்திற்கு தேவையான மனித வளத்தை உருவாக்க மற்றும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் இதன்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
Post a Comment